சார் படத்தின் டிரைலர் நாளை வெளியீடு| The trailer of Sir will be released tomorrow
போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரைலர் மற்றும் இசை நாளை வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. டிரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மிஷ்கின் மற்றும் நடிகர் ஆர்யா அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளனர்.திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.